Support Our Schools Organization donated food supplies valued at LKR 40,000.00 to KN/Iyanarpuram GTMS (Government Tamil Mixed School) in Iyanerpuram, Kilinochchi. This contribution ensures that students receive nutritious meals, supporting their health, growth, and ability to focus on their education.
“வடக்கு மாகாண மட்டப் பெருவிளையாட்டுப் போட்டிகளில் எமது பாடசாலை 17 வயது, 20 வயது பெண்கள் உதைபந்து அணியினர் கலந்து கொண்டு, 17 வயது பெண்கள் உதைபந்து அணியினர் தேசிய மட்டப் போட்டியில் கலந்து கொள்ளத் தெரிவாகியுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். அத்துடன், இம் மாணவர்களின் உணவுத் தேவையை நிறைவு செய்வதற்கு தாங்கள் நிதியுதவியாக ரூபாய் 40,000.00 (நாற்பதாயிரம் ரூபாய்) வழங்கி உதவியமைக்காகவும், தொடர்ந்து எமது பாடசாலையின் வளர்ச்சியில் சகல வழிகளிலும் பங்களிப்புச் செய்து வருவதனால் மாணவர்களின் அடைவு மட்ட அதிகரிப்புக்கும், இணைப் பாடச் செயற்பாடுகளில் சாதனை நிகழ்த்துவதற்கும் தங்களின் நிதியுதவி பெரும் உதவிகளை வழங்கி வருகின்றது என்பதை நினைவுகூருகின்றேன். தாங்கள் செய்து வரும் அனைத்துவிதமான உதவிகளுக்கும் பாடசாலைச் சமூகம் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.”— T.D. Gjegard - Principal, KN/Iyanarpuram GTMS (Government Tamil Mixed School), Kilinochchi